< Back
சினிமா செய்திகள்
அரண்மனை 4: கதையே கேட்காமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் - ராஷி கன்னா

image courtecy:instagram@raashiikhanna

சினிமா செய்திகள்

அரண்மனை 4: 'கதையே கேட்காமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்' - ராஷி கன்னா

தினத்தந்தி
|
30 April 2024 11:37 AM IST

நடிகை ராஷி கன்னா, அரண்மனை 4 படத்தில் நடித்தது குறித்து பேசினார்.

சென்னை,

சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் 'அச்சச்சோ' என்ற முதல் பாடலும் வெளியாகின.

இந்நிலையில், நடிகை ராஷி கன்னா அரண்மனை 4 படத்தில் நடித்தது குறித்து பேசினார். அவர் பேசுகையில், சுந்தர்.சி சார் அரண்மனை 4 படத்தில் என்னை நடிக்க அழைத்தபோது உடனடியாக ஒப்புக்கொண்டேன். கதையே கேட்கவில்லை. இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. என்றார்.

மேலும் செய்திகள்