< Back
சினிமா செய்திகள்
R Madhavan once being very jealous of Dhanush
சினிமா செய்திகள்

தனுஷை பார்த்து பொறாமைப்பட்ட பிரபல நடிகர் - ஏன் தெரியுமா?

தினத்தந்தி
|
14 Aug 2024 3:37 PM IST

நடிகர் தனுஷ், ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'ராஞ்சனா' படத்தில் நடித்தார்.

சென்னை,

தமிழ், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருபவர் மாதவன். இவர் கடந்த 2000-ம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழில் பிரபலமானார். இந்தியில் அமீர் கானுடன் இவர் நடித்த 3 இடியட்ஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இவர், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனு வெட்ஸ் மனு மற்றும் தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களும் பிளாக்பஸ்டர்களாகின.

இவ்வாறு முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் முன்னதாக நடிகர் தனுஷை பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறார் என்பது உங்களுக்கு தெரியுமா?. ஆம், ஒரு பேட்டியில் இதனை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

'ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். தனுஷை பார்த்து பொறாமையாக உள்ளது. தனுஷின் அடுத்த படத்தை ஆனந்த் இயக்குகிறார். ஆனந்துடன் வேலை செய்யும் எந்த நடிகரை பார்த்தாலும் பொறாமைப்படுவேன், என்றார்.

நடிகர் தனுஷ், ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான 'ராஞ்சனா' படத்தில் நடித்தார்.அதனைத்தொடர்ந்து, தனுஷ் நடித்த 'தேரே இஷ்க் மெய்ன்' படத்தையும் ஆனந்த்தான் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்