< Back
சினிமா செய்திகள்
முன்னணி நடிகர்களிடம் தமன்னா கேட்க விரும்பும் கேள்விகள்...!
சினிமா செய்திகள்

முன்னணி நடிகர்களிடம் தமன்னா கேட்க விரும்பும் கேள்விகள்...!

தினத்தந்தி
|
3 Aug 2023 10:11 AM IST

நடிகை தமன்னா டாப் நடிகர்களிடம் தான் கேட்க விரும்பும் கேள்விகள் குறித்து தெரிவித்துள்ளார்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா, ரஜினிகாந்துடன் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் காவாலா பாடலுக்கு அவர் ஆடும் நடனம் பெரியளவில் பிரபலமாகி இருக்கிறது.

பெரிதும் விரும்பப்படும் நடிகையாக மாறியிருக்கும் தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் டாப் நடிகர்களிடம் தான் கேட்க விரும்பும் கேள்விகள் குறித்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, "எனக்கு விஜய்யிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு வந்தால், 'தளபதி 68' படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்பேன். அந்த படத்தில் நான் நடிப்பதாக வரும் தகவலில் உண்மையில்லை. ஆனால் அதில் நடிக்க எனக்கு விருப்பம் இருக்கிறது.

அஜித் நன்றாக சமைப்பார். படப்பிடிப்பின்போது அவர் இட்லி செய்து தந்தார். அந்த மிருதுவான இட்லியை எங்கேயும் சாப்பிட்டது கிடையாது. அடுத்து எப்போ எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்? என்று கேட்பேன். சாப்பிட மட்டுமல்ல, அவர் பைக்கில் ரைடுக்கு கூப்பிட்டாலும் போய்விடுவேன்.

தனுசை பார்க்கும்போதெல்லாம், 'மும்பைக்கு எப்போது வந்தாலும் கால் பண்ணுங்க' என்று சொல்வேன். ஆனால் அவர் போன் பண்ணவே மாட்டார். எனவே இந்தமுறையும் அதே கேள்வியை கேட்பேன்.

சூர்யாவை நேரில் பார்த்தால் 'கங்குவா' படத்தின் கதை என்ன? என்று கேட்பேன்'' என்று ஜாலியாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்