< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
விஜய் அரசியல் கட்சி குறித்த கேள்வி - நடிகர் ஜெயம் ரவி அளித்த பதில்
|10 Feb 2024 5:17 PM IST
நடிகர் ஜெயம் ரவி திருப்பதியில் அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி,
நடிகர் ஜெயம் ரவி திருப்பதியில் அவரது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
அப்போது ஜெயம்ரவியிடம் செய்தியாளர் ஒருவர் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து நடிகர் ஜெயம் ரவி அளித்த பதிலில் கூறியதாவது,
நான் நடிக்கும் படம் பற்றி ஏதாவது கேள்வி இருந்தால் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என புதிய கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.