கணவராக வருபவரின் தகுதிகள் - நடிகை சோபிதா துலிபாலா
|ஆந்திர நடிகையான சோபிதா துலிபாலா தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்த நிலையில் சோபிதா துலிபாலா அளித்துள்ள பேட்டியில், "சொந்த வாழ்க்கை சம்பந்தமாக வரும் வதந்திகள் என்னை இம்மியளவும் பாதிக்காது. ரசிகர்கள் எனது சொந்த விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டாமல் எனது வேலையை பற்றி மட்டும் பேசினால் சந்தோஷப்படுவேன்.
நான் விசாகப்பட்டினத்தில் இருந்து சினிமாவில் நடிக்க வந்தேன். இந்த நிலைமைக்கு வர ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையாக உழைத்து இருக்கிறேன். எனக்கு வரக்கூடிய கணவர் எப்படிப்பட்ட தகுதி உடையவராக இருக்க வேண்டும் என்று எனக்குள் சில ஆசைகள் உள்ளன.
வாழ்க்கையில் எவ்வளவு உயரத்துக்கு வளர்ந்தாலும் அவர் அடக்கமானவராக இருக்க வேண்டும். எளிமை, நல்ல மனம், மற்றவர்கள் மீது கருணை மனம் கொண்டவராக இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றமாதிரி ஒவ்வொரு கணத்தையும் அனுபவிப்பவராகவும் இருக்க வேண்டும்'' என்றார்.
சோபிதா துலிபாலாவும் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் உள்ளன.