< Back
சினிமா செய்திகள்
செல்ல நாய்க்கும் விமானத்தில் ஒரு டிக்கெட் போடுங்க... பிரபல நடிகை ராஷ்மிகா
சினிமா செய்திகள்

செல்ல நாய்க்கும் விமானத்தில் ஒரு டிக்கெட் போடுங்க... பிரபல நடிகை ராஷ்மிகா

தினத்தந்தி
|
26 Jun 2022 11:48 AM IST

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா தயாரிப்பாளர்களிடம் தனது செல்ல நாய்க்கும் விமானத்தில் ஒரு டிக்கெட் போட கூறினார் என்ற செய்தி பரவி வருகிறது.



ஐதராபாத்,



தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபத்தில் புஷ்பா படத்தில் நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளார். இவரை பற்றி வெளிவந்து உள்ள தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. அதன்படி, அவர் தயாரிப்பாளர்களிடம் தனது செல்ல நாய் குட்டிக்கும் விமானத்தில் செல்வதற்கு டிக்கெட் போடும்படி கோரிக்கை வைத்து வருகிறார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தி நேரடியாக நடிகை ராஷ்மிகாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை கேட்டு அவர் அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.

அவர் தனது டுவிட்டர் வழியே இந்த தகவலுக்கு பதிலளித்து உள்ளார்.

இதுபற்றி சமூக ஊடக பயனாளர் ஒருவர் இதுபோல் நிறைய விசயங்கள் தலைப்பு செய்திகளாக வருகின்றன என தெரிவித்து உள்ளார். அதற்கு நடிகை ராஷ்மிகா, உண்மையாகவா? அப்படியென்றால் தயவு செய்து அந்த தகவல்களை எனக்கு அனுப்புங்கள். அட கடவுளே!! எனது அன்பு செல்வங்கள் அனைத்தும் இதுபோன்ற விசயங்களுக்கு இலக்காவது கண்டு நான் ஆச்சரியம் அடைகிறேன். இருந்தபோதும், இதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்து உள்ளார்.

அவர் சிரிப்புக்கான பல எமோஜிக்களை அடுத்தடுத்து வரிசையாக பதிவிட்டு உள்ளார். ஆரா (ராஷ்மிகாவின் செல்ல நாயின் பெயர்) என்னுடன் பயணம் செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால் கூட... அது என்னுடன் பயணிக்க விரும்பவில்லை... ஐதராபாத்தில் மகிழ்ச்சியுடன் உள்ளது. உங்கள் கவலைக்கு எனது நன்றிகள் என தெரிவித்து உள்ளார். அதற்கு கீழே என்னால் சிரிப்பை நிறுத்த முடியவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

நடிகை ராஷ்மிகா, அடுத்து நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கும் குட்பை என்ற படத்திற்கான படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இதுதவிர, நடிகர் ரன்பீர் கபூருடன் அனிமல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். சித்தார்த் மல்கோத்ராவின் மிஷன் மஞ்சு படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.

மேலும் செய்திகள்