கேசவா பாத்திரத்தில் நடிக்க இவர்தான் என் முதல் தேர்வாக இருந்தார்- புஷ்பா பட இயக்குனர்
|புஷ்பா படத்தில் கேசவா பாத்திரத்தில் நடிக்க சுஹாஸ்தான் என் முதல் தேர்வாக இருந்தார் என்று சுகுமார் கூறினார்.
சென்னை,
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் 'புஷ்பா-தி ரைஸ்'. இப்படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.
தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குனர் சுகுமார், நடிகர் சுஹாஸ் நடித்துள்ள 'பிரசன்ன வதனம்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
நடிகர் சுஹாஸ் நடித்துள்ள பிரசன்ன வதனம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுகுமார் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படத்தின் டிரெய்லரை வெளியிட்டார். இந்த படம் அடுத்த மாதம் 3 ம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது.
இந்நிலையில், இயக்குனர் சுகுமார் சுஹாஸ் குறித்து கூறுகையில், புஷ்பா படத்தில் கேசவா பாத்திரத்தில் நடிக்க சுஹாஸ்தான் என் முதல் தேர்வாக இருந்தார். அப்படியென்றால் ஏன் அவரை தேர்ந்தெடுக்கவில்லை என்று கேட்களாம், அதற்கு காரணம், அப்போது அவர் படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்தார். அப்படி உள்ள நிலையில், அவரை இந்த பாத்திரத்தில் நடிக்க வைப்பது தவறு என்று கருதினேன். நானி ஒரு சிறந்த நடிகர் என்று எல்லோருக்கும் தெரியும். அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். சுஹாஷ் எதிர்கால நானியாக வருவார். இவ்வாறு கூறினார்.