< Back
சினிமா செய்திகள்
ரஷிய மொழியில் புஷ்பா படம்
சினிமா செய்திகள்

ரஷிய மொழியில் 'புஷ்பா' படம்

தினத்தந்தி
|
2 Dec 2022 10:19 AM IST

புஷ்பா படத்தை ரஷிய மொழியிலும் வெளியிட இருக்கிறார்கள்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து கடந்த வருடம் வெளியான தெலுங்கு படம் புஷ்பா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் அதிக வசூல் பார்த்தனர். இந்த படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா குத்துப்பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது. புஷ்பா படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுன் இந்திய அளவில் பிரபலமாகி உள்ளார். அவர் நடித்த இதர படங்களையும் அனைத்து மொழிகளும் டப்பிங் செய்து வெளியிடும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த நிலையில் புஷ்பா படத்தை ரஷிய மொழியிலும் வெளியிட இருக்கிறார்கள். கடந்த சில வாரங்களாக ரஷிய மொழியில் டப்பிங் செய்யும் பணி நடந்தது. தற்போது அந்த பணிகள் முடிக்கப்பட்டு ரஷிய மொழியில் டிரெய்லரை வெளியிட்டு உள்ளனர். புஷ்பா படத்தின் ரஷிய மொழி பதிப்பு ரஷிய நகரங்களில் அதிகமான தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்