< Back
சினிமா செய்திகள்
புஷ்பா பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
சினிமா செய்திகள்

'புஷ்பா' பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

தினத்தந்தி
|
19 April 2023 5:10 PM IST

‘புஷ்பா’ படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகில் முன்னனி பட தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருவது 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம். இந்த நிறுவனத்தின் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கிய ரங்கஸ்தலம், புஷ்பா ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. தொடர்ந்து 'புஷ்பா-2' படத்தை சுகுமாரன் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் சுகுமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக் ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த 'புஷ்பா-2' படத்தின் படப்பிடிப்பு இன்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்