< Back
சினிமா செய்திகள்
ரஷியாவில் வசூல் சாதனை புரியும் புஷ்பா
சினிமா செய்திகள்

ரஷியாவில் வசூல் சாதனை புரியும் 'புஷ்பா'

தினத்தந்தி
|
3 Jan 2023 9:14 AM IST

‘புஷ்பா’ படம் இந்தியாவில் ரூ.350 கோடியை தாண்டிய நிலையில் ரஷியாவிலும் வெற்றி பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்.

சுகுமார் இயக்கி கடந்த ஆண்டு அல்லு அர்ஜூன் நடிப்பில் 'புஷ்பா' வெளியானது. இந்த படத்தில் அல்லு அர்ஜூனின் யதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இதன் காரணமாக ரஷிய மொழியில் 'டப்' செய்து அந்நாட்டில் கடந்த மாதம் 8-ந்தேதி 700-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. தற்போது வெளியாகி 25 நாட்கள் கடந்தும் இதற்கான மவுசு ரஷியாவில் குறையவில்லை. இதற்கு சான்றாக இந்த படத்தின் வசூல் அந்த நாட்டில் இதுவரை ரூ.13 கோடியை கடந்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவில் ரூ.350 கோடியை தாண்டிய நிலையில் ரஷியாவிலும் வெற்றி பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். தற்போது புஷ்பா படத்தின் 2-ம் பாக பணிகள் வேகமாக நடத்து வருகிறது.

மேலும் செய்திகள்