அல்லு அர்ஜுன் பிறந்தநாள்: வீட்டின் முன் குவிந்த ரசிகர்கள்- வைரலான வீடியோ
|அல்லு அர்ஜுன் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை,
தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். இவர் நடித்த புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றியை பெற்றது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் அல்லு அர்ஜுனை காண அவரது வீட்டின் முன் குவிந்தனர்.
அப்போது ரசிகர்களை காண அல்லு அர்ஜுன் வீட்டின் வெளியே வந்தார். பின்னர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி உள்ளது.
தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா தி ரைஸ் என்ற தலைப்பில் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் அல்லு அர்ஜுனின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை 11.07 மணி அளவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இவருக்கு துபாயில் மெழுகு சிலை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.