< Back
சினிமா செய்திகள்
புஷ்பா 2 படத்தின் புதிய பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'புஷ்பா 2' படத்தின் புதிய பாடல் வெளியானது

தினத்தந்தி
|
29 May 2024 3:55 PM IST

'புஷ்பா 2 ' படத்தின் புதிய பாடலான 'சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி' என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் புதிய பாடலான 'சூடான தீ கங்கு மாதிரி இருப்பானே என் சாமி' (The Couple Song) என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை தமிழில் விவேகா எழுதியுள்ள நிலையில் ஸ்ரேயா கோஷல் அனைத்து மொழிகளிலும் பாடியுள்ளார்.

மேலும் செய்திகள்