< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு..! காயமடைந்த காவல்துறை அதிகாரி..! 'வாரிசு' பட விழாவில் பரபரப்பு

தினத்தந்தி
|
24 Dec 2022 6:05 PM IST

இசைவெளியீட்டு விழாவில் உள்நுழைவது தொடர்பாக ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தொடர்ந்து 'வாரிசு' திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தின் 'ரஞ்சிதமே' மற்றும் 'தீ தளபதி', 'சோல் ஆஃப் வாரிசு' பாடகள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது.

இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை , நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தமிழகம் எங்கும் இருந்து ரசிகர்கள் படையெடுத்து நேரு அரங்கில் குவிந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள், பெரும் புள்ளிகளும் கலந்துகொள்கின்றனர்.

இந்த நிலையில் வாரிசு இசைவெளியீட்டு விழாவில் உள்நுழைவது தொடர்பாக ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .மேலும் பலரும் அரங்குக்கு வெளியேவும் காத்திருக்கின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்