< Back
சினிமா செய்திகள்
குத்தாட்ட பாடல்... புஷ்பா 2-ல் நடிக்க சமந்தா மறுப்பா?
சினிமா செய்திகள்

குத்தாட்ட பாடல்... புஷ்பா 2-ல் நடிக்க சமந்தா மறுப்பா?

தினத்தந்தி
|
19 Feb 2023 8:10 AM IST

புஷ்பா 2-ல் சமந்தா குத்தாட்டம் ஆட மறுத்து விட்டதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு சமந்தா தரப்பில் அவரது குழுவினர் பதில் அளித்துள்ளனர்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஜோடியாக நடித்து 2021 டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படத்தில் சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா மாமா' குத்தாட்ட பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இதிலும் சமந்தாவின் குத்தாட்ட பாடல் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்று கருதிய படக்குழுவினர் சமந்தாவை நடிக்க அழைத்ததாகவும் ஆனால் அவரோ குத்தாட்டம் ஆட மறுத்து விட்டதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.

சமந்தா ஏன் மறுப்பு சொன்னார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆரோக்கிய பிரச்சினைகள் காரணமாக இருக்குமோ என்றும் பேசினர்.

இந்த நிலையில் இதற்கு சமந்தா தரப்பில் அவரது குழுவினர் பதில் அளித்துள்ளனர். அவர்கள் கூறும்போது, "புஷ்பா 2-ம் பாகத்தில் நடிக்க சமந்தா மறுத்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அந்த படத்தில் நடிக்கும்படி படக்குழுவினர் சமந்தாவை அணுகவில்லை'' என்று தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்