இணையத்தில் கசிந்த புல்கித் - கிருத்தியின் திருமண அழைப்பிதழ்
|புல்கித் - கிருத்தி ஜோடி இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை,
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 'வீரே கி' திரைப்படத்தில் இணைந்து நடித்த புல்கித் சாம்ராட், கிருத்தி கர்பந்தா இருவரும் காதலிப்பதாகவும் டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து பகல்பந்தி (2019) மற்றும் தைஷ் (2020) ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம், இருவரின் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகின. காதலர் தினத்தன்று கிருத்தி, புல்கித் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து, "கைகோர்த்து அணிவகுப்போம். இனிய காதலர் தின வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பதிலளித்த புல்கித், "நான் உன்னை காதலிக்கிறேன்... கிருத்தி கர்பந்தா" என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் புல்கித் - கிருத்தி ஜோடி இந்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் கசிந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த திருமண அழைப்பிதழில், புல்கித் மற்றும் கிருத்தி இருவரும் கடற்கரையில் அமர்ந்திருப்பது போன்ற ஓவியம் இடம்பெற்றுள்ளது.
இதிலிருந்து அவர்களது திருமணம் கடற்கரையில் நடைபெறும் என்று தெரிகிறது. மேலும், அந்தப் பதிவில் அவர்களது திருமணம் மார்ச் 13-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.