மாலத்தீவு சென்று வீடியோ வெளியிட்ட இந்தி நடிகைக்கு எதிர்ப்பு
|மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரபலங்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள்.
நடிகர்-நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை விரும்புகிறார்கள். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அந்த தீவுக்கு போய் முகாமிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அங்கு விதம் விதமாக போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாக வெடித்தன. இதையடுத்து மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என ரன்வீர் சிங், சல்மான் கான், அக்ஷய்குமார், கங்கனா ரணாவத் உள்ளிட்ட பிரபலங்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். சமூக வலைதளங்களிலும் இது தொடர்பான கருத்துகள் பரப்பப்பட்டு வருகிறது.
இந்த சர்ச்சைக்கு இடையில் தனது 45-வது பிறந்தநாளை கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுள்ள இந்தி நடிகை பிபாஷா பாசு, அங்கு நீச்சல் உடையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மொத்த இந்திய திரையுலகமே மாலத்தீவு பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி வரும் வேளையில், மாலத்தீவு பயணத்திற்கு ஆதரவளிப்பது போல் நடப்பதா? என்று பிபாஷா பாசுவை, சமூக வலைத்தளங்களில் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.