< Back
சினிமா செய்திகள்
கதாநாயகனான சூரி நெகிழ்ச்சி
சினிமா செய்திகள்

கதாநாயகனான சூரி நெகிழ்ச்சி

தினத்தந்தி
|
11 March 2023 7:34 AM IST

நகைச்சுவை நடிகர்கள் வடிவேல், சந்தானம், யோகிபாபு ஆகியோர் கதாநாயகர்களாகி உள்ள நிலையில் தற்போது சூரியும் வெற்றி மாறன் இயக்கும் விடுதலை படம் மூலம் கதாநாயகனாகி இருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகிறது. இதில் விஜய்சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. விடுதலை பட விழா நிகழ்ச்சியில் சூரி பங்கேற்று பேசும்போது, "இதுவரை நகைச்சுவை நடிகராக பலமேடைகளில் ஏறி பேசி இருக்கிறேன். இப்போது முதல் முறையாக கதை நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த படம் இளையராஜா இசையில் உருவாவது மகிழ்ச்சி.

வெற்றி மாறன் இயக்கும் படத்தில் நான்கு காட்சிகளாவது நடிக்க மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறேன். அவரை நேரில் சந்தித்து பேசியபோது இந்த கதை குறித்து சொன்னார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் நடிகர்களை தேர்வு செய்து விட்டதாக கூறினார். பின்னர் கதாநாயகனாக நடிப்பது யார் என்று யோசித்தபோது நீங்கள்தான் கதாநாயகன் என்று சொன்னார்.

உடனே நான் சந்தோஷத்தில் எழுந்தபோது வானத்தில் முட்டி இருப்பேன். எனக்குள் இருக்கும் இன்னொரு நடிகனை தட்டி எழுப்பினார். அவருக்கு நன்றி'' என்றார்.

மேலும் செய்திகள்