< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கவின் படத்தின் புரோமோ வீடியோ வெளியீடு
|31 Aug 2023 10:42 PM IST
கவின் கதாநாயகனாக நடிக்கும்படத்திற்கு 'ஸ்டார்' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஒய்.எஸ்.ஆர்.பிலிம்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி படத்தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தயாரித்து வெளியான முதல் படம் 'பியார் பிரேமா காதல்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குனர் எலன் இயக்கி இருந்தார்.
'பியார் பிரேமா காதல்' படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் எலன் உடன் இணைந்துள்ளார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. கவின் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு 'ஸ்டார்' என்று படக்குழு தலைப்பு வைத்துள்ளது.
இந்த நிலையில் யுவன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் புரோமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது.