< Back
சினிமா செய்திகள்
இறைவன் படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு
சினிமா செய்திகள்

'இறைவன்' படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு

தினத்தந்தி
|
14 Sept 2023 10:05 PM IST

'இறைவன்' படத்தின் 'இது போல' என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

'வாமனன், 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஹரி.கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. 'இறைவன்' திரைப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி 'இறைவன்' படத்தின் 'இது போல' என்ற பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் செப்டம்பர் 16-ந்தேதி மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் சக்தி ஶ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ளனர்.

மேலும் செய்திகள்