< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
லியோ படத்தின் அண்ணன் நான் தனியா வரவா..? விஜய் பாடிய பாடலின் புரோமோ வெளியீடு...!
|20 Jun 2023 5:03 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'.
சென்னை,
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஜூன் 22 நடிகர் விஜய் பிறந்த நாளன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இந்நிலையில் லியோ படத்தின் நா ரெடி பாடலின் pரோமோ, இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி மாலை 5 மணிக்கு நாடி ரெடி பாடலின் ப்ரோமோ வெளியானது.