சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் இன்று வெளியாகிறது
|சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் சிவகார்த்திகேயன் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் என்கிற நிறுவனத்தின் மூலம் ஏராளமான படங்களை தயாரித்து வருகிறார்.சிவகாத்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த கனா, அருவி, டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வெற்றி பெற்றன.
இந்நிலையில் அவருடைய தயாரிப்பில் வெளியாகும் புதிய படம் தொடர்பான அறிவிப்பை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் கோவில், பள்ளிக்கூடம் தொடர்பான காட்சிகள் உள்ளது.இன்று இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களை சிவகார்த்திகேயன் தயாரித்து வருவதால், அவரின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பும் மக்களிடையே கவனம் பெற்றுள்ளது.