< Back
சினிமா செய்திகள்
தயாரிப்பாளராகும் கீர்த்தி சுரேஷ்
சினிமா செய்திகள்

தயாரிப்பாளராகும் கீர்த்தி சுரேஷ்

தினத்தந்தி
|
3 Dec 2022 11:25 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்கிறார். ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து இருந்தார். தற்போது மாமன்னன், சைரன் ஆகிய 2 படங்கள் கைவசம் உள்ளன. அஜித்குமாரின் வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகும் 'போலோ சங்கர்' படத்தில் சிரஞ்சீவியிடன் நடித்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது தந்தை ஏற்கனவே மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடித்த வாஷி படத்தை தயாரித்து இருந்தார். தற்போது கீர்த்தி சுரேஷ் நேரடியாகவே நல்ல கதையம்சம் உள்ள சிறுபட்ஜெட் படங்களை தனது பெயரில் தயாரிக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக கதைகள் கேட்டு வருவதாக தகவல் பரவி உள்ளது.

மேலும் செய்திகள்