< Back
சினிமா செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு ஸ்கூட்டி...  நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்
சினிமா செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் 13 பேருக்கு ஸ்கூட்டி... நெகிழ வைத்த ராகவா லாரன்ஸ்

தினத்தந்தி
|
18 April 2024 2:53 PM IST

மல்லர் கம்ப கலையில் சிறந்து விளங்கிய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்த நடிகர் ராகவா லாரன்ஸ்.

நடனத்தில் திறமை வாய்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு தனது நடனப்பள்ளியில் வாய்ப்புக் கொடுத்து வருகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். அதோடு இயலாதவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்ப கலையில் சிறந்து விளங்கும் மாற்றுத் திறனாளிகளை சமீபத்தில் சந்தித்தார்.

அவர்களுக்கு பைக் வாங்கி கொடுப்பதாகவும் வீடு கட்டித் தருவதாகவும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் உறுதியளித்தார். மேலும், அவர்களை வைத்து படம் எடுக்க உள்ளதாகவும் அறிவித்தார். இதில் பைக் வாங்கித் தருவதாகச் சொன்ன முதல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்.

13 மாற்றுத் திறனாளி கலைஞர்களுக்கு பைக் வாங்கிக் கொடுத்துள்ள வீடியோவைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சந்திப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மிகவும் தைரியமாக மல்லர்கம்பம் கலை செய்து காட்டியதைப் பற்றி பேசினேன். அவர்களின் உறுதியையும் கடின உழைப்பையும் கண்டு நான் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். அவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதாகவும், அவர்களுக்கு வீடுகள் கட்டித் தருவதாகவும் உறுதியளித்தேன். முதல் கட்டமாக, 13 பைக்குகள் வழங்கப்படும் என்ற எனது வாக்குறுதி இன்று நிறைவேற்றினேன். அனைத்து பைக்குகளும் மூன்று சக்கர வண்டிகளாக மாற்றப்படும்.

அவர்களுக்கு உறுதியளித்தபடி விரைவில் வீடு கட்டித் தருவேன். இந்த சிறப்பான நாளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். உங்கள் அனைவரின் ஆசியும் ஆதரவும் எனக்கு தேவை" எனக் கூறியுள்ளார். ராகவா லாரன்ஸ் செய்த உதவிக்கு மல்லர்கம்ப வீரர்களும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்