
சிவகார்த்திகேயனின் அயலான் படம் தீபாவளிக்கு வெளியாகுமா? - வெளியான தகவல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது.
சென்னை,
சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் உருவாகி வருகிறது. ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ''அயலான் படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் சிஜிஐ காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணிபுரிந்துள்ளோம். அயலான் ஒரு பான் இந்தியன் திரைப்படம். அதிக எண்ணிக்கையிலான சிஜிஐ காட்சிகள் கொண்ட படமாக இருக்கும்.
படம் முழுவதும் வரும் வேற்று கிரக வாசி அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 4500க்கும் அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் படமாக அயலான் இருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்தப் படத்தின் சிஜிஐ பணிகள் தாமதமாவதால் படம் சொன்னபடி தீபாவளிக்கு வெளியாவது கடினம் என்று தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், அயலான் ரிலீஸ் குறித்த வதந்திகள், வதந்திகளே! திட்டமிட்டபடி தீபாவளி ரிலீசுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது என்றும், விரைவில் டீசர் வெளிவரும் எனவும் இயக்குநர் தரப்பில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.