பார்த்திபன் படத்துக்கு சிக்கல்
|பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகவில்லை. இதுக்குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் படம் கடந்த ஜூலை மாதம் திரைக்கு வந்தது. ஆனாலும் இதுவரை ஓ.டி.டி தளத்தில் வெளியாகாமல் உள்ளது. இரவின் நிழல் படம் ஓரிரு நாளில் ஓ.டி.டி யில் வந்து விடும் என்று ஏற்கனவே பார்த்திபன் தெரிவித்து இருந்தார். ஆனாலும் இதுவரை வரவில்லை. இதற்காக பார்த்திபன் வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பார்த்திபன் வெளியிட்டுள்ள புதிய பதிவில், ''இன்று முதல் 'பொன்னியின் செல்வன்' எனவே, வரும் வாரம் வருமாம் 'இரவின் நிழல்'-செய்தி பெருமழையில் தேங்கிவிடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவிற்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக்கிடம். இடர் காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகளவு உதவுவதும் பெருங்கொடை. குடையாக விரியும் அரசின் உதவிகள். அடுத்த சீசனில் மழைக்கும்முன் இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழைசாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை'' என்று கூறியுள்ளார். பொன்னியின் செல்வனால் இரவின் நிழல் திட்டமிட்டபடி வெளியாகாமல் தாமதமாகி இருப்பதாக பார்த்திபன் சுட்டிக்காட்டி உள்ளார்.