< Back
சினிமா செய்திகள்
பிரியங்கா மோகன் பகிர்ந்த சூர்யாவின் சனிக்கிழமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்
சினிமா செய்திகள்

பிரியங்கா மோகன் பகிர்ந்த 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

தினத்தந்தி
|
1 Sept 2024 5:55 PM IST

நடிகர் நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் எடுத்த புகைப்படங்களை பிரியங்கா மோகன் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

'டாக்டர்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். அதன்பிறகு 'எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் நேச்சுரல் ஸ்டார் நானியுடன் இணைந்து ' கேங் லீடர் ' படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக இணைந்து 'சரிபோதா சனிவாரம்' படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அபிராமி, அதிதி பாலன், பி. சாய் குமார், சுபலேகா சுதாகர், முரளி ஷர்மா மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.டிடிவி நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

'சூர்யாவின் சனிக்கிழமை' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் முதல்நாளில் ரூ.24.11 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இப்படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், நடிகை பிரியங்கா மோகன் தற்போது 'சூர்யாவின் சனிக்கிழமை' படப்பிடிப்பு புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் நடிகர் நானி மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அதில் 'சூர்யாவின் சனிக்கிழமை' படத்தில் பணிபுரிவது எனக்கு ஒரு ஆழமான பயணம், மறக்க முடியாத தருணங்கள் நிறைந்தது, மேலும் நிபந்தனையற்ற அன்பைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்