< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
முகத்தில் ரத்தக்காயத்துடன் இருக்கும் பிரியங்கா சோப்ரா - வீடியோ வைரல்
|21 Jun 2024 8:23 PM IST
நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் ரத்தக்காயத்துடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார்
சென்னை,
தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. அதனைத்தொடர்ந்து அவருக்கு பட வாப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. பின்னர் பாலிவுட் நடிகையாக உயர்ந்தார். இவர் 2018-ம் பாடகர் நிக் ஜோனாசை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முகத்தில் ரத்தக்காயத்துடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோ வைரலானநிலையில், அதனை பார்த்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
பின்னர், இது அவர் நடிக்கும் 'தி பிளப்' படத்தின் படப்பிடிப்பு வீடியோ என்று தெரியவந்தது. ஆனாலும், ரசிகர்கள் 'உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்', 'என்னாச்சு' என கமெண்ட் செய்து வருகிறார்கள்.