< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா மற்றும் ஆலியா பட் வரிசையில் பிரியங்கா சோப்ராவின் 'டீப் பேக்' வீடியோ

7 Dec 2023 4:15 AM IST
இதில் அவர் தனது வருட வருமானத்தை தெரிவிப்பது போன்று வீடியோவை தயாரித்துள்ளனர்.
மும்பை,
'டீப் பேக்' ஆபாச வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த தொழில்நுட்பத்தில் நடிகைகளின் முகத்தை ஆபாச நடிகைகள் உடலில் பொருத்தி நிஜமானது போலவே மார்பிங் செய்து உருவாக்குகின்றனர். எனவே நடிகைகள் பலர் அச்சத்தில் உள்ளனர்.
ஏற்கனவே நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, அலியாபட், கத்ரினா கைப் ஆகியோரின் ஆபாச 'டீப் பேக்' வீடியோக்கள் வந்துள்ளன.
தற்போது இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும் 'டீப் பேக்' வீடியோவில் சிக்கி உள்ளார். பிரியங்கா சோப்ரா இதற்கு முன் பேசிய வீடியோவில் அவரது முகத்தை மாற்றாமல் குரலை மட்டும் மாற்றி உள்ளனர். இதில் ஒரு போலி நிறுவனத்தை விளம்பரப்படுத்துவது போல் அவர் பேசியதை மாற்றி உள்ளனர். மேலும் அவரது தனது வருமானத்தை தெரிவிப்பது போன்றும் வீடியோவை உருவாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.