< Back
சினிமா செய்திகள்
கவர்ச்சி உடையில் கணவருடன் பிரியங்கா சோப்ரா
சினிமா செய்திகள்

கவர்ச்சி உடையில் கணவருடன் பிரியங்கா சோப்ரா

தினத்தந்தி
|
16 Aug 2024 3:56 PM GMT

பிரியங்கா சோப்ரா பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மும்பை,

விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து இந்தி திரை உலகில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார். கடந்த 2018-ம் ஆண்டு ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார். கணவர் மற்றும் குழந்தையோடு வெளிநாட்டில் வசித்து வரும் பிரியங்கா சோப்ரா அடிக்கடி சமூக வலைதளங்களில் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், காதல் கணவர் நிக்ஜோனசுடன் கவர்ச்சியான உடையில் நின்றபடி எடுத்த புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்