புஷ்பா 2 படத்தில் வில்லியாக பிரியாமணி?
|புஷ்பா 2 படத்தில் வில்லியாக நடிக்க நடிகை பிரியாமணி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வப்படுகின்றனர். பேட்ட, மாஸ்டர், விக்ரம் படங்களில் விஜய் சேதுபதி நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் வில்லனாக நடிக்கவும் அழைப்புகள் வருகிறது. கதாநாயகிகளும் வில்லியாக நடிக்க விரும்புகிறார்கள். திரிஷா கொடி படத்தில் வில்லியாக வந்தார். இந்த நிலையில் பிரியாமணியிடம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராகும் புஷ்பா 2-ம் பாகம் படத்தில் வில்லியாக நடிக்க படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் முதல் பாகம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது. எனவே இரண்டாம் பாகம் படத்துக்கு எதிர்பார்ப்பு உள்ளது. புஷ்பா 2 படத்தில் விஜய்சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
விஜய் சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணியை அணுகி உள்ளனர். விஜய்சேதுபதி போலவே பிரியாமணியும் இதில் வில்லி வேடம் ஏற்கிறார். பிரியாமணி நடிப்பில் தற்போது கொட்டேஷன் கேங் என்ற படம் தயாராகி வருகிறது. இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடிக்கிறார்.