< Back
சினிமா செய்திகள்
உண்மை கதையில் பிரியாமணி
சினிமா செய்திகள்

உண்மை கதையில் பிரியாமணி

தினத்தந்தி
|
25 Nov 2022 6:00 AM IST

தமிழில் கடைசியாக ‘சாருலதா’ படத்தில் நடித்த பிரியாமணி தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘டிஆர் 56’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

'பருத்தி வீரன்' படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிரியாமணி தமிழில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கன்னடம், மலையாளம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

தமிழில் கடைசியாக 'சாருலதா' படத்தில் நடித்து இருந்தார். தற்போது பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் 'டிஆர் 56' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் வெளியாக உள்ளது. ராஜேஷ் ஆனந்த் லீலா டைரக்டு செய்துள்ளார். படத்துக்கு கதை, திரைக்கதை, எழுதி தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் பிரவீன் ரெட்டி.

மீண்டும் தமிழ் படத்தில் நடித்துள்ளது பற்றி பிரியாமணி கூறும்போது, "சாருலதா' படத்துக்கு பிறகு தமிழில் மீண்டும் 'டிஆர் 56' என்ற படத்தில் நடித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படம் உண்மை கதை. இயக்குனர் கதையை என்னிடம் சொன்னபோது நிஜமாக இப்படியெல்லாம் நடக்குமா என்று மிரண்டு போனேன். இது மருத்துவ மாபியா கும்பலை பற்றிய கதை. நான் சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறேன். தமிழ், தெலுங்கில் ஏ.என்.பாலாஜி வெளியிடுகிறார். தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.

மேலும் செய்திகள்