தனுசை குறிவைக்கும் பிரியா வாரியர்
|தனுஷ் மீது எனக்கு பிரியம் உள்ளது. தனுசுடன் நடிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசை உள்ளது என்றார் பிரியா வாரியர்.
ஒரு அடார் லவ் என்ற மலையாள படத்தில் கண் சிமிட்டி இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பிரியா வாரியரை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனாலும் அந்த படத்துக்கு பிறகு பிரியா வாரியர் நடித்த அனைத்து படங்களுமே தோல்வியை சந்தித்தன. மீண்டும் பட வாய்ப்பை பிடிக்க சமூக வலைத்தளங்களில் அரைகுறை உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை பகிர்ந்து கவர்ச்சிக்கு தயார் என்று சிக்னல் கொடுத்து வருகிறார்.
ஏற்கனவே மலையாளம், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ள பிரியா வாரியர் தமிழில் இதுவரை நடிக்கவில்லை. இதனால் தனுசை குறி வைத்துள்ளார். இதுகுறித்து பிரியா வாரியர் அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு தனுசை மிகவும் பிடிக்கும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத அளவுக்கு தனுஷ் மீது எனக்கு பிரியம் உள்ளது. அவர் மீது இருப்பதை ஒரு விதமான பைத்தியம் என்றும் சொல்லலாம். தனுசுடன் நடிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக ஆசை உள்ளது. என் ஆசை விரைவிலேயே நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன்" என்றார். பெரிய நடிகர்களை கவரும் வித்தை பிரியா வாரியருக்கு தெரிந்து விட்டது என்று ரசிகர்கள் வலைத்தளத்தில் பதில் அளித்து வருகிறார்கள்.