< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பிரியா பவானி சங்கர் கை உயர்ந்தது
|7 Oct 2022 9:58 AM IST
ஐஸ்வர்யா ராஜேஷ் இடத்தை பிரியா பவானி சங்கர் பிடித்துக் கொண்டார்.
மளமளவென்று, ஏராளமான படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இப்போது சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. அவருடைய இடத்தை பிரியா பவானி சங்கர் பிடித்துக் கொண்டார்.
பிரியா இப்போது, 'இந்தியன்-2' படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துக்கொண்டு அவர், 'டிமாண்டி காலனி-2' படத்தில் நடிக்க முடிவு செய்து இருக்கிறார். 'ருத்ரன்' படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார்.