< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தெலுங்கு படத்தில் பிரியா பவானி சங்கர்
|28 Jan 2023 9:43 AM IST
தெலுங்கில் தயாராகும் ‘ஜீப்ரா' என்ற படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
தமிழில் 'மேயாத மான்' மூலம், படம் மூலம் அறிமுகமான பிரியா பவானி சங்கர் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், ஓ மணப்பெண்ணே, கசடதபற, யானை, குருதி ஆட்டம், மாபியா, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார். தற்போது பத்து தல, பொம்மை, அகிலன், ருத்ரன், டிமாண்டி காலனி 2 ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.
இந்த நிலையில் தெலுங்கில் தயாராகும் 'ஜீப்ரா' என்ற படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.இதில் இளம் முன்னணி நடிகர் சத்யதேவ், தாலி தனஞ்செயா, ஜெனிபர் பிசினாடோ ஆகியோரும் நடிக்கிறார்கள். சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். அதிரடி கிரைம் படமாக உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.