'சலார்' படத்தில் பிருத்விராஜின் கதாபாத்திரம் அறிவிப்பு - வைரலாகும் போஸ்டர்
|'சலார்' திரைப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் 'வரதராஜ மன்னார்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
'கே.ஜி.எப்' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
'கே.ஜி.எப்' திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரிக்கிறது. சலார் திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் 'சலார்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் 'வரதராஜ மன்னார்' என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிருத்விராஜ் நடித்திருப்பதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.