< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மகேஷ் பாபுவின் 29வது படத்தில் வில்லன் இவரா? - வெளியான தகவல்
|19 May 2024 1:24 PM IST
மகேஷ் பாபுவின் 29வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பிருத்விராஜிடன் படக்குழு பேசிவருவதாக கூறப்படுகிறது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்றது. இதைத்தொடர்ந்து ராஜமவுலி அடுத்ததாக நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் எஸ்எஸ்எம்பி29 படத்தை இயக்கவுள்ளார்.
இந்த படம் ஆக்சன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பிருத்விராஜிடன் படக்குழு பேசி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.