பிருத்விராஜ் நடிக்கும் 'ஆடு ஜீவிதம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு...!
|சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
சென்னை,
தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார்.இவர் தற்போது ஆடு ஜீவிதம் என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை டைரக்டர் பிளஸ்சி இயக்கி உள்ளார். மலையாள எழுத்தாளர் பென்யாமின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கபட்டு உள்ளது. நாயகியாக அமலாபால் நடித்துள்ளார்.இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் .
இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.தற்போது டப்பிங், இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி, 'ஆடு ஜீவிதம்; திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 30, 2024