< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

லூசிபர் 2-ம் பாகம்

தினத்தந்தி
|
19 Aug 2022 6:25 PM IST

மோகன்லால் நடிப்பில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் வந்துள்ளன. இதுபோல் மலையாளத்திலும் வெற்றி பெற்ற படங்களின் அடுத்த பாகங்களை எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே மோகன்லால், மீனா நடித்த திரிஷ்யம் படத்தின் 2 பாகங்கள் வந்துள்ளன. இதன் 3-ம் பாகத்தை எடுக்கவும் முயற்சிகள் நடக்கிறது. இதுபோல் மோகன்லால் நடிப்பில் 2019-ல் வெளியான லூசிபர் படத்தின் 2-ம் பாகமும் தயாராக உள்ளது. லூசிபர் படத்தை நடிகர் பிருதிவிராஜ் டைரக்டு செய்து இருந்தார். இதில் மஞ்சுவாரியர், விவேக் ஓபராய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

லூசிபர் படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க காட் பாதர் என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். மோகன்லால் நடிப்பில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. லூசிபர் 2-ம் பாகத்தையும் பிருதிவிராஜே இயக்குகிறார்.

மேலும் செய்திகள்