< Back
சினிமா செய்திகள்
ஹே ஜெசிக்கா - சிவகார்த்தியேன் நடிக்கும் பிரின்ஸ் படத்தின் புதிய பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

'ஹே ஜெசிக்கா' - சிவகார்த்தியேன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் புதிய பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
24 Sept 2022 1:54 PM IST

சிவகார்த்தியேன் நடிக்கும் 'பிரின்ஸ்' படத்தின் 'ஹே ஜெசிக்கா' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரின்ஸ்' திரைப்படத்தின் முதல் பாடலான 'பிம்பிலிக்கி பிலாப்பி' பாடல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இந்த நிலையில் 'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது.

பாடலாசிரியர் அறிவு எழுதியுள்ள 'ஜெசிக்கா' என்ற இந்த பாடலை இசையமைப்பாளர் தமன் பாடியுள்ளார். இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்