< Back
சினிமா செய்திகள்
நேர மேலாண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் - வைரமுத்து புகழாரம்
சினிமா செய்திகள்

நேர மேலாண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் - வைரமுத்து புகழாரம்

தினத்தந்தி
|
28 April 2024 11:06 AM IST

கவிஞர் வைரமுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று முகாம் அலுவலகத்தில் சந்தித்தார்.

சென்னை,

நேர மேலாண்மையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார் என்று கவிஞர் வைரமுத்து புகழ்ந்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்-அமைச்சரை நேற்று முகாம் அலுவலகத்தில் சந்தித்தேன். குறித்த நேரம் காலை 10.15. நான் அடைந்த நேரம் 10.14. முதல்-அமைச்சர் வந்து வரவேற்ற நேரம் 10.15. நேர மேலாண்மையில் சர்வதேச ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார்.

40 ஆண்டுகளாய்ப் பார்த்தும் பழகியும் வருகிறேன். பருவம் கூடக் கூடப் பக்குவம் கூடிவருகிறது. வயது கூடக் கூட மரம் வைரம் பாய்வது மாதிரி" என்று தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்