< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
தமிழில் இன்று வெளியாகும் 'பிரேமலு'
|15 March 2024 6:43 AM IST
சமீபத்தில் பிரேமலு படத்தின் தமிழ் டிரைலரை படக்குழு வெளியிட்டது.
சென்னை,
கடந்த மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் 'பிரேமலு'. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் தெலுங்கிலும் 'பிரேமலு' படம் வெளியானது. சமீபத்தில், இந்த படத்தின் தமிழ் டிரைலரை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் 'பிரேமலு' திரைப்படம் இன்று தமிழிலும் வெளியாகிறது.