< Back
சினிமா செய்திகள்
8ம் தேதி தெலுங்கில் வெளியாகும் ப்ரேமலு திரைப்படம்
சினிமா செய்திகள்

8ம் தேதி தெலுங்கில் வெளியாகும் ப்ரேமலு திரைப்படம்

தினத்தந்தி
|
5 March 2024 5:36 AM IST

கடந்த மாதம் 9-ம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் ப்ரேமலு எனும் படம் வெளியானது.

சென்னை,

கடந்த மாதம் 9-ம் தேதி மலையாள மொழியில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் ப்ரேமலு எனும் படம் வெளியானது. மாமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரமாக நடித்துள்ளனர். 3 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரைக்கும் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் 92 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இப்படம் இடம்பெற்றுள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்களிடம் நல்ல வரவேற்பும், பாராட்டும் கிடைத்தமையால் படக் குழுவினர் இப்படத்தை தெலுங்கு மொழியில் டப் செய்து வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வரும் 8-ம் தேதி தெலுங்கு மொழியில் இத்திரைப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்