11 வருடங்களுக்கு பிறகு....கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரீத்தி ஜிந்தா
|கேன்ஸ் விழாவில் 11 வருடங்களுக்கு பிறகு பிரீத்தி ஜிந்தா கலந்துகொண்டுள்ளார்.
பாரிஸ்,
77-வது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. இன்று கேன்ஸ் விழாவின் கடைசி நாளாகும். விழாவில் இந்திய திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்று இருக்கின்றனர். சர்வதேச அளவிலான பல படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
இதில் இந்தியாவை சேர்ந்த 2 குறும்படங்கள் விருதுகளை வென்றிருக்கின்றன. இதில், மைசூரை சேர்ந்த சித்தானந்த் எஸ்.நாயக் இயக்கத்தில் உருவான சன்பிளவர் என்ற குறும்படம் முதல் பரிசை வென்று இருக்கிறது.
இந்தியாவில் இருந்து பிரபல நடிகைகளான ஐஸ்வர்யா ராய், கியாரா அத்வானி, சோபிதா துபிபாபா, பிரீத்தி சிந்தா உள்பட பலர் விழாவில் பங்கேற்று இருக்கின்றனர்.
தற்போது, கேன்ஸ் விழாவில் பங்கேற்க பிரான்ஸ் சென்றுள்ள பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் உடுத்தியுள்ள வெள்ளை நிற கவுனின் விலை ரூ. 5.5 லட்சம் ஆகும்.
இந்த விழாவில் பிரீத்தி ஜிந்தா 11 வருடங்களுக்கு பிறகு கலந்துகொண்டுள்ளார். இதற்கு முன்பு கடந்த 2013-ம் ஆண்டு கலந்துகொண்டார்.