< Back
சினிமா செய்திகள்
ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை கொண்டாடிய பிரீத்தி ஜிந்தா
சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை கொண்டாடிய பிரீத்தி ஜிந்தா

தினத்தந்தி
|
5 April 2024 10:01 AM IST

ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து பஞ்சாப் கிங்ஸ் வெற்றியை பிரீத்தி ஜிந்தா கொண்டாடினார்.

மும்பை,

நேற்று குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 17-வது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்டிங்கை தொடங்கியது. இறுதி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19.5 ஓவர்களில் 200 ரன்கள் குவித்து திரில் வெற்றி பெற்றது.

சஷாங்க் சிங் 61 ரன்களுடன்(6 பவுண்டரி, 4 சிக்ஸர்) இறுதிவரை களத்தில் இருந்தார். குஜராத் தரப்பில் நூர் முகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில், பஞ்சாப் அணி வெற்றி பெற்றதை அடுத்து பிரீத்தி ஜிந்தா, ரசிகர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்தும் இதய குறியை காட்டியும் வெற்றியை கொண்டாடியுள்ளார். இது குறித்தான வீடியோ இணையத்தில் பரவியது. இதனை பார்த்த ரசிகர்கள் பிரீத்தி ஜிந்தாவை பாராட்டி பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், பஞ்சாப் வென்றது ஆட்டத்தை, பிரீத்தி ஜிந்தா வென்றது நமது இதயத்தை என்றும் , மற்றொருவர் , பஞ்சாப் வென்றபோது பிரீத்தி ஜிந்தா செய்த செயல் விலைமதிப்பில்லாதது என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்