< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
"என் கர்ப்பத்திற்கு காரணம் இவர்தான்" காதலனின் புகைப்படத்தை வெளியிட்ட இலியானா...!!!
|17 July 2023 5:18 PM IST
கர்ப்பமாக இருக்கும் நடிகை இலியானா தற்போது தனது காதலனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மும்பை,
தமிழில் 'நண்பன்' படத்தில் விஜய் ஜோடியாக நடித்துள்ள இலியானா, தெலுங்கு, இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. குழந்தைக்கு தந்தை யார் என்ற விவரத்தையும் வெளியிடாமல் இருந்தார்.
கர்ப்பிணியான இலியானாவுக்கு வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். தொடர்ந்து வயிறு பெரிதாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். சமீபத்தில் அடையாளம் காணமுடியாத வகையில் காதலனுடன் இருக்கும் மங்கலான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இலியானா பகிர்ந்தார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காதலனின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 'டேய்ட் நைட்' என்று குறிப்பிட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.