< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும் - ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை
|7 May 2023 7:36 PM IST
மணிப்பூரில் கலவரம் நடைபெற்று வந்த நிலையில் அமைதி திரும்ப வேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட் செய்துள்ளார்.
ராய்பூர்,
மணிப்பூரில் கடந்த சில நாட்களாக குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறி கலவரம் ஏற்பட்டதைத்தொடர்ந்து கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன, மேலும் அங்கு இன்னும் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் மணிப்பூரில் நிலவிவரும் பதற்றம் குறைந்து அமைதி திரும்பவேண்டும் என ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மணிப்பூரில் அமைதி திரும்பி இயல்புநிலைக்கு மாறவேண்டும் என தான் பிரார்த்தனை செய்வதாக ஏ.ஆர்.ரஹ்மான் டுவீட் செய்துள்ளார்.