< Back
சினிமா செய்திகள்
வைரலாகும் பிரசாந்தின் கண்ணிலே பாடல்
சினிமா செய்திகள்

வைரலாகும் பிரசாந்தின் கண்ணிலே பாடல்

தினத்தந்தி
|
23 Feb 2023 10:45 PM IST

இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த். இவர் 90களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் அந்தகன். பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

இதில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்குகிறார்.

இந்நிலையில் அந்தகன் படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணிலே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்