< Back
சினிமா செய்திகள்
தனுஷ் இயக்கும் ராயன் படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் - புதிய போஸ்டரை பகிர்ந்த படக்குழு
சினிமா செய்திகள்

தனுஷ் இயக்கும் ராயன் படத்தில் இணைந்த பிரகாஷ்ராஜ் - புதிய போஸ்டரை பகிர்ந்த படக்குழு

தினத்தந்தி
|
23 Feb 2024 6:53 PM IST

'ராயன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் தனுஷ் படங்களில் நடிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் வருகிறார். தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்துக்கு 'ராயன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. 'ராயன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 'ராயன்' படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


மேலும் செய்திகள்