< Back
சினிமா செய்திகள்
நேபாளி உடையில் பிரகாஷ்ராஜ்
சினிமா செய்திகள்

நேபாளி உடையில் பிரகாஷ்ராஜ்

தினத்தந்தி
|
19 May 2022 11:00 AM IST

நேபாளி உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரகாஷ்ராஜ் வெளியிட்டு உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக பிரதமர் நரேந்திரமோடியை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது புகைப்படம் மூலம் மீண்டும் அவரை மறைமுகமாக தாக்கி இருப்பதாக பலரும் பேசுகின்றனர். நேபாளி உடையில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரகாஷ்ராஜ் வெளியிட்டு உள்ளார்.

அதில், "எங்களின் மிக உயர்ந்த தலைவரை பார்த்து இதை நான் கற்றுக்கொண்டேன். நீங்களும் ஏன் இதை முயற்சி செய்யக்கூடாது'' என்று பதிவையும் பகிர்ந்துள்ளார்.

பிரதமர் நரேந்திரமோடி நேபாளம் சென்றபோது அங்குள்ள கலாசார உடை அணிந்து இருந்தார். அவரை விமர்சிப்பதற்காகவே இந்த உடையை பிரகாஷ்ராஜ் அணிந்து இருப்பதாக பலர் வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜை மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகரராவ் ஆலோசிப்பதாக தகவல் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்