< Back
சினிமா செய்திகள்
பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியானது
சினிமா செய்திகள்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியானது

தினத்தந்தி
|
10 April 2024 10:12 PM IST

புதிய படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது

சென்னை,

2019 - ம் ஆண்டில் வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தில் ஜெயம் ரவி, காஜல்அகர்வால் ஆகியோர் இதில் நடித்தனர்.இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப்படத்தை தொடர்ந்து பிரதீப் 'லவ் டுடே' படத்தை இயக்கி நடித்தார். இந்த படம் மிகப்பெரிய ஹிட்டானது.இதையடுத்து பிரதீப் ரங்கநாதன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'எல்ஐசி' படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.இப்படத்தில் கீர்த்திஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தை லலித் தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க பிரதீப் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.அந்த படத்தை தற்போது 'ஓ மை கடவுளே' இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார். இந்த புதிய படத்தின் தலைப்பு விரைவில் வெளியாக உள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவுள்ளது.இந்த திரைப்படம் சம்பந்தமான அறிமுக விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்